Latestமலேசியா

மெர்டேகா கொண்டாட்டம்: பொதுமக்களுக்காக ‘Photo Spot’-ஆக மாறிய கோப்பெங் தீயணைப்பு நிலையம்!

கோப்பெங், ஆகஸ்ட் 20 – தீ விபத்து என்றால் விரைந்து செல்லும் தீயணைப்பு நிலையம், இப்போது மெர்டேகா மாதத்தை முன்னிட்டு பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் இடமாக மாறியுள்ளது!

கோப்பெங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், சுதந்திர மாதத்தைக் கொண்டாடும் வகையில் மெர்டேகா கருப்பொருளில் சிறப்பு அலங்காரங்களைச் செய்துள்ளது.

அதோடு நிற்காமல், குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வந்து அந்த அலங்காரங்களின் முன்பு இலவசமாக புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

“குடும்பத்தையும் நண்பர்களையும் அழைத்து வாருங்கள்; மெர்தேகா உற்சாகத்தை எங்களுடன் கொண்டாடுங்கள்” என கோப்பெங் மக்களுக்கு தீயணைப்பு நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த வாய்ப்பு ஆகஸ்ட் 31 வரை பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

வழக்கமாக அவசர நேரங்களில் மக்களுக்கு உதவும் தீயணைப்பு வீரர்கள், இம்முறை மெர்டேகா கொண்டாட்டத்தின் மூலம் சமூகத்துடன் இன்னும் நெருக்கமாக இணைய மேற்கொண்டுள்ள இந்த முயற்சி கவனம் ஈர்த்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!