Latestமலேசியா

மேற்குக்கரை கரையோர நெடுஞ்சாலையில், இன்று நள்ளிரவு தொடங்கி இரு மாதங்களுக்கு டோல் இலவசம்

தைப்பிங், மார்ச் 11 – WCE எனப்படும் மேற்குக்கரை கரையோர  நெடுஞ்சாலையில் தைப்பிங் முதல்  பெருவாஸ் வரை  இன்று நள்ளிரவு தொடங்கி எதிர்வரும்  மே மாதம்  11 ஆம் தேதிவரை இரு மாதங்களுக்கு Toll கட்டணம்  இன்றி  பயணம் செய்யமுடியும் .  Ramadan  மற்றும் அடுத்த மாதம்  நோன்பு பொருநாள் காலத்தை முன்னிட்டு  அந்த நெடுஞ்சாலை தடத்தில்   Toll கட்டணம்  இன்றி இலவசமாக பயன்படுத்தும்  வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக   பொதுப் பணி அமைச்சர்  டத்தோஸ்ரீ  Alexander Nanta Linggi தெரிவித்தார்.

 

இன்று நள்ளிரவு மணி  12.01 அளவில்   WCE  நெடுஞ்சாலை  திட்டத்தின்   தென் தைப்பிங் Multi level  சந்திப்பு சாலையிலிருந்து    பெருவாஸ் சாலை சந்திப்பு வரையிலான Section 11  பகுதி  திறக்கப்பட்டதை  முன்னிட்டு  அவர் இதனை அறிவித்தார்.  பேராக்கில் ஒட்டுமொத்த  மேற்குக்கரையோர நெடுஞ்சாலை பகுதியான   Section 11 முழுமையான நிர்மாணிக்கப்பட்டு விட்டதாகவும்  அவை  செக்சன் 8,9,10 மற்றும் 11 ஆகியவற்றை  முழுமையாக உள்ளடக்கியிருப்பதாக  அவர் கூறினார்.

Ramadan மற்றும் Aidilfitri- யை முன்னிட்டு  இன்று நள்ளிரவு  மணி 12.01  முதல் மே  11ஆம் தேதிவரை   இலவச Toll  வசதி  வழங்கப்பட்டிருப்பது குறித்து   WCE  நெடுஞ்சாலை நிறுவனத்திற்கு  நாங்கள்  நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம் என  Alexander Nanta  கூறினார்.  பேரா மந்திரிபுசார்   டத்தோஸ்ரீ Saarani Mohamad  இது தொடர்பாக கோரிக்கை விடுத்திருந்ததையும்    அவர்   சுட்டிக்காட்டினார்.  இந்த நிகழ்சியில்   Saarani Mohamad  மற்றும் அமைச்சின் தலைமை செயலாளர்  டத்தோஸ்ரீ  Hasnol Zam Zam Ahmad  தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!