Latestமலேசியா

பன்முகத்தன்மையே மலேசியாவின் பலம் – ஆரோன் ஆகோ டாகாங்

மலேசியாவின் தனித்துவத்தையும் தேசிய அடையாளத்தையும் வடிவமைக்கும் பலமே அதன் பன்முகத்தன்மை எனத் தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங் வலியுறுத்தியுள்ளார்.

‘Negara Bangsa’ எனப்படும் தேசக் கட்டமைப்பு குறித்த விளக்கத் தொடரில் இடம்பெற்றுள்ள அவரது கருத்தில், பல்வேறு இனங்கள், மதங்கள், பண்பாடுகள் மற்றும் மொழிகளைக் கொண்ட மலேசியர்கள், ஒரு பொதுவான தேசிய அடையாளத்தின் கீழ் ஒன்றுபட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

கூட்டரசு அரசியலமைப்பையும் ருக்குன் நெகாராவையும் அடிப்படையாகக் கொண்டு, மக்களிடையே பரஸ்பரப் புரிதலை வளர்ப்பதும், வேறுபாடுகளை மதிப்பதும், நாட்டுப்பற்றை வலுப்படுத்துவதும் தேசக் கட்டமைப்பில் முக்கியப் பங்கு வகிப்பதாக அந்த விளக்கத் தொடர் எடுத்துரைக்கிறது.

தேசக் கட்டமைப்புக்கான ஆறு அடித்தளங்கள், எட்டுக் கோட்பாடுகள் மற்றும் எட்டுச் சவால்களையும் இத்தொடர் விளக்குகிறது. நாட்டுப்பற்று, இனங்களுக்கிடையிலான பரஸ்பர மரியாதை, நாட்டின் நிறுவனங்கள் மீதான நம்பிக்கை உள்ளிட்ட ஒன்பது அம்சங்கள் மலேசியக் குடிமக்களின் அடையாளத்தை வடிவமைப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தலைமுறையும் அன்றாட வாழ்வில் வேறுபாடுகளை மதித்து, பரஸ்பரப் புரிதலை வளர்ப்பதன் மூலம் மலேசியாவின் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த முடியும் என்பதே இத்தொடரின் மையச் செய்தியாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!