Latestமலேசியா

ம.இ.கா இளைஞர்-மகளிர் பிரிவுத் தலைவர் பதவிகளுக்குப் போட்டியின்றி வெற்றி

கோலாலம்பூர், ஜூன்-10, ம.இ.கா தேசிய மகளிர் பிரிவின் தலைவியாக ஜொகூர், கெமெலா சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி நல்லதம்பி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2024-2027 தவணைக்கான பதவிக்கு தன்னை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், சரஸ்வதி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

புதுமுகங்களுக்கு வழி விடும் வகையில் மோகனா முனியாண்டி இம்முறை மகளிர் தலைவி பதவியைத் தற்காத்துக் கொள்ள போட்டியிடவில்லை.

இவ்வேளையில் மகளிர் பிரிவின் துணைத் தலைவியாக Dr பி.தனலெட்சுமியும் போட்டியின்றி வெற்றிப் பெற்றார்.

இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கும் போட்டி இல்லை.

இதையடுத்து அர்விந் கிருஷ்ணன் புதியத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

நடப்புத் தலைவரும் ஜொகூர் தெங்காரோ சட்டமன்ற உறுப்பினருமான ரவீன் குமார் இம்முறை போட்டியிடவில்லை.

ம.இ.கா புத்ரா பிரிவின் புதியத் தலைவராக சத்தீஷ் குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

எனினும் புத்ரி பிரிவின் தலைவி பதவிக்கு தீபா சோலமலை – ரவீனா ஸ்ரீ வித்யா இருவருக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

இளைஞர், மகளிர், புத்ரா-புத்ரி பிரிவுகளுக்கான வேட்புமனூத்தாக்கல் ம.இ.கா தலைமையகத்தில் நேற்று நிறைவடைந்த போது, தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அம்முடிவுகளை அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!