Latestமலேசியா

ரம்புத்தான் மர உரிமையாளரின் தயாள குணம் ; நெட்டிசன்களின் பாராட்டை குவித்து வருகிறது

கோலாலம்பூர், ஜூலை 23 – இலவசமாக ரம்புத்தான் பழங்களை அறுத்து செல்ல அனுமதி வழங்கி இருக்கும் நபர் ஒருவரின் செயல், சமூக ஊடகங்களில் வைரலாகி, பாராட்டுகளை பெற்று வருகிறது.

“இந்த கம்பத்து பாதையை பயன்படுத்துபவர்கள், ரம்புத்தான் பழங்களை இலவசமாக அறுத்து செல்லலாம்” என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டிருக்கும் ரம்புத்தான் மரம் ஒன்றின் படமும் அந்த பதிவோடு இணைக்கப்பட்டுள்ளது.

அதோடு நில்லாமல், ரம்புத்தான் பழங்களை எளிதாக அறுக்க, நீண்ட கம்பு ஒன்றையும் அந்நபர் மரத்திற்கு அருகில் தயார் நிலையில் வைத்திருப்பது, நெடிசன்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

@amirsyazal எனும் டிக் டொக் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள அந்த பதிவை, இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள வேளை ; ஆறாயிரத்துக்கும் அதிகமான “லைக்குகள்” இடப்பட்டுள்ளன.

“ரம்புத்தான் மர உரிமையாளரின் செயல், மற்றவர்களை மகிழ்வித்துள்ளது. அவரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என இணைய பயனர் ஒருவர் குறிப்பிட்டுள்ள வேளை ;

ரம்புத்தான் வெறுமனே கீழே விழுந்து வீணாகாமல் இருக்க, பிறருக்கு இலவசமாக கொடுக்கும் உரிமையாளரின் செயலை, மற்றொருவர் பாராட்டியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!