Latestமலேசியா

வெளிநாட்டு தொழிலாளர்கள் விவகாரம் மனித வள அமைச்சின் கீழ் இருக்க வேண்டும் – குலசேகரன்

பெட்டாலிங் ஜெயா , டிச 27 – வெளிநாட்டு தொழிலாளர்கள் விவகாரம் மனித வள அமைச்சின் கீழ் இருக்க வேண்டும் என பிரதமர் துறையின் சட்ட மற்றும் அமைப்புகளுக்கான சீரமைப்புத்துறை துணையமைச்சர் எம். குலசேகரன் வலியுறுத்தினார்.

வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பது மற்றும் அவர்களை நிர்வகிக்கும் பொறுப்பை மனித வள அமைச்சு ஏற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக் காலத்தில் தாம் மனித வள அமைச்சராக இருந்தபோது சுயேட்சை குழு ஒன்று இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட 64 நாடுகளில் மலேசிய மட்டுமே வெளிநாட்டு தொழிலாளர்களின் நிர்வாகம் இரண்டு அமைச்சின் கீழ் இருக்கும் ஒரு நாடாக இருப்பதாக குலசேகரன் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு ஊழியர்களைக் கையாள்வதில் மனிதவள அமைச்சின் அதிகாரத்திற்கு மாற்றுவது மிகவும் திறமையான, வெளிப்படையான மற்றும் ஒருங்கிணைந்த அமைப்பை ஏற்படுத்தும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் குலசேகரன் தெரிவித்தார்.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்பான கொள்கை மேம்பாடுகளைப் பற்றி விவாதிக்க உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயிலை சந்திப்பதாக அறிவித்ததை அடுத்து குலசேகரனின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!