Latestமலேசியா

ஷா ஆலம் எல்மினா சாலையில் நட்டுகள் சிதறியதால் பல கார் டயர்கள் பஞ்சர்

கோலாலம்பூர், மே-19-ஷா ஆலம் (Shah Alam) நகரின் எல்மினா (Elmina) பகுதியில் உள்ள சாலையில் அதிக அளவில் நட்டுகள் (screws) சிதறி கிடந்ததால், பல வாகனங்களின் டயர்கள் பஞ்சர் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தள பயனர் ஒருவர், சாலையில் கிடந்த நட்டுகளை தனது கணவர் எடுத்து கொண்டிருந்த புகைப்படங்களை வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டதன் மூலம் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த பதிவு வெளியான பிறகு, பலரும் அதே பகுதியில் தங்களது கார் டயர்கள் பஞ்சர் ஆனதாக தெரிவித்தனர்.

மேலும் ஒரு பயனர், எல்மினா சாலை அருகே தனது புதிய டயர் சேதமடைந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சாலையில் இருந்த நட்டுகளை அகற்றிய அந்த நபருக்கு பலரும் நன்றி தெரிவித்தனர்.

அவரது செயல் காரணமாக மேலும் பல வாகனங்கள் பாதிக்கப்படாமல் தப்பியிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!