Latestமலேசியா

ஸ்டார்பக்ஸ் புறக்கணிப்பு ; மலேசியர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஒக்கினாவா, மார்ச் 4 – ஸ்டார்பக்ஸை புறக்கணிக்கும் செயலை உடனடியாக நிறுத்துமாறு, பெர்ஜாயா குழுமத்தின் நிறுவனரும், ஆலோசகருமான டான் ஸ்ரீ வின்சென்ட் டான் சீ யோன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த புறக்கணிப்பு நடவடிக்கையால், மலேசியர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதையும் வின்சென்ட் டான் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்டார்பக்ஸ் மலேசியா என்பது மலேசியாவுக்கு சொந்தமான நிறுவனம் என்பதை, அதனை புறக்கணிக்கும் அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அதன் தலைமையகத்தில் வேலை செய்யும் ஒருவர் கூட வெளிநாட்டவர் இல்லை.

நாடு முழுவதும் உள்ள ஸ்டார்பக்ஸ் கடைகளில் வேலை செய்யும் பணியாளர்களில், 80 முதல் 85 விழுக்காட்டினர் முஸ்லீம்கள் ஆவர்.

அதனால், இந்த புறக்கணிப்பு நடவடிக்கை, யாருக்கும் எந்த பலனையும் கொண்டு வரப்போவதில்லை என்பதை வின்சென்ட் டான் சுட்டிக்காட்டினார்.

எனினும், அண்மைய சில நாட்களாக விற்பனையில் சற்று முன்னேற்றம் தென்படுவதால், நிலைமை மெல்ல சீரடையத் தொடங்கியுள்ளதை போல தெரிவதாகவும், வின்சென்ட் டான் தெரிவித்தார்.

அதனால், 2024-ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், விற்பனையில் முன்னேற்றம் ஏற்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, 2024-ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், ஸ்டார்பக்ஸ் நிறுவனம் நான்கு கோடியே 20 லட்சம் ரிங்கிட் வரை இழப்பை எதிர்நோக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!