புத்ரா ஜெயா, ஜூலை 1 -ஸ்ரீ பெர்டானா ( Sri Perdana ) வளாகத்தில் கூடியது தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக அதன் ஏற்பாட்டாளர்கள் உட்பட 11 பேர் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்டனர்.
அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை மாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்தது. விசாரணைக்கு உதவ மேலும் இரண்டு தனிப்பட்ட நபர்கள் அழைக்கப்பட்டதாக புத்ரா ஜெயா வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அஸ்மாடி ( Asmadi) தெரிவித்தார்.
ஏற்பாட்டாளரான அய்டில் யூனுசிடம் தனியாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதோடு அவர் போலீசிற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததாக அஸ்மாடி கூறினார். கடந்த சனிக்கிழமையன்று கறுப்பு உடையணிந்த சுமார் 200 பேர் Sri Perdana வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதோடு 30 நாட்களுக்குள் எட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கையை விடுத்தனர்.