Latestமலேசியா

ஹாலிவூட் படத்தில் சிறப்புத் தோற்றம்; உள்ளூர் செய்தி வாசிப்பாளர் மோகனபிரியாவின் புதிய மைல்கல்

கோலாலம்பூர், ஏப்ரல்-19, நாட்டின் பிரபல தொலைக்காட்சி ஆங்கில செய்தி வாசிப்பாளர் மோகனப்பிரியா சின்னராஜா, தேவ் பட்டீல் இயக்கத்தில் வெளியாகி தற்போது உள்ளூர் திரையங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் Monkey Man படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

அதிரடி காட்சிகளுடன் விறுவிறுப்புக்குக் குறைவில்லாமல் எடுக்கப்பட்டுள்ள அப்படத்தில், மோகனப்பிரியா செய்தியாளராகவே தோன்றுகிறார்.

அதோடு சில காட்சிகளுக்கு பின்னனி குரலும் கொடுத்துள்ளார்.

செய்தி வாசிப்பில் அழகான ஏற்ற இறக்கத் தொனிக்குப் புகழ்பெற்றவரான மோகனப்பிரியா, கோவிட் பெருந்தொற்றின் போது, தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்துள்ளார்.

மோகனபிரியாவுடன் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த 200-கும் மேற்பட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஆஸ்கார் புகழ் இயக்குனர் தேவ் பட்டீலுடன் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு, மறக்க முடியாத அருமையான அனுபவம் என Miss Malaysia Indian Global முன்னாள் அழகியுமான மோகனப்பிரியா வருணித்தார்.

பன்முகத்திறமைக் கொண்ட மோகனப்பிரியாவின் வண்ணமயமான ஊடகத் துறை வாழ்க்கையில் இந்த சினிமா கௌரவத் தோற்றம் மற்றொரு மைல் கல்லாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!