Latestஉலகம்மலேசியா

100 வயதைக் கடந்த முன்னாள் தலைவர் தம்பதியாக மகாதீர்–சித்தி ஹஸ்மா; Asia Records அங்கீகாரம்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-13-முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் முஹமட்டும், அவரது மனைவி துன் Dr சித்தி ஹஸ்மாவும், ஆசிய மற்றும் ஆசியான் அளவில் 3 புதியச் சாதனைகளைப் படைத்து மீண்டும் வரலாறு படைத்துள்ளனர்.

தென்கிழக்காசிய வட்டாரத்தின் மிகவும் வயதான முன்னாள் பிரதமர் என மகாதீருக்கும், மிகவும் வயதான முன்னாள் பிரதமரின் மனைவி என சித்தி ஹஸ்மாவுக்கும் ASEAN Records அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.

அதே சமயம் , _’ஆசியாவிலேயே 100 வயதைக் கடந்த (Centenarian), ஒரு நாட்டின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது துணைவி என’_ Asia Records இருவரையும் இணைந்து கௌரவித்துள்ளது.

​ஜூலை 10 ஆம் தேதி மகாதீரின் 101-ஆவது பிறந்தநாள், ஜூலை 12-ஆம் தேதி சித்தி ஹஸ்மாவின் 100-ஆவது பிறந்தநாள் மற்றும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அவர்களின் 70-ஆவது திருமண நாள் ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில், ‘பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளையில்’ இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

​ஆசியான் வட்டாரத்திலோ அல்லது ஆசியாவின் முக்கிய நாடுகளிலோ இது போன்றதொரு சாதனை இதுவரை பதிவாகவில்லை என்பதை நடுவர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!