Latestமலேசியா

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை: 209 வெளிநாட்டுப் பெண்கள் கைது

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-10-ஜோகூரில் உள்ள 12 பொழுதுபோக்கு மையங்களில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், GRO உபசரிப்பாளர்களாக பணியாற்றிய 209 வெளிநாட்டுப் பெண்கள் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டனர்.

Op Noda என்ற பெயரில் அதிகாலை 2.15 மணி முதல் காலை 9 மணி வரை இந்தச் சோதனை நடத்தப்பட்டது.கைதானவர்களில் வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ், இந்தோனேசியா, மியன்மார் மற்றும் பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் அடங்குவர்.

மேலும், அந்த மையங்களின் பொறுப்பாளர்கள் 13 பேரும் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.கைதுச் செய்யப்பட்டவர்களில் 44 பேர் போதைப்பொருள் பரிசோதனையில் தோல்விக் கண்டதாகவும், 7 பேருக்கு ஏற்கனவே குற்றப் பின்னணி உள்ளதாகவும் போலீஸ் கூறியது.

குடிநுழைவுச் சட்ட விதிகளை மீறியதற்காக இவர்கள் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.சட்டத்தை மீறும் பொழுதுபோக்கு மையங்களின் உரிமங்கள் இரத்துச் செய்யப்படும் என ஜோகூர் போலீஸ் கடுமையாக எச்சரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!