Latestமலேசியா

19 ஆண்டுகால சிறைத்துறை அனுபவம்! தைப்பிங் சிறைச்சாலையின் புதிய இயக்குநராக SAC S. தனபால்!

தைப்பிங், நவ. 16–மலேசிய சிறைத்துறையில் தனது 19 ஆண்டுகால அனுபவம், அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவ ஆற்றலால் படிப்படியாக உயர்ந்து வந்துள்ள Senior Assistant Commissioner (SAC) S. Tanabal a/l Socklingam, தற்போது பேராக் மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தைப்பிங் சிறைச்சாலையின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு மலேசிய சிறைத்துறையில் தனது சேவையைத் தொடங்கிய அவர், சுங்கை பூலோ சிறைச்சாலையில் தனது பணிப் பயணத்தை ஆரம்பித்தார். அங்கு சுமார் 13 ஆண்டுகள் பணியாற்றிய அவர், சிறைச்சாலை பாதுகாப்பு, நிறுவன நிர்வாகம், கைதிகள் கண்காணிப்பு மற்றும் அவர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளில் ஆழ்ந்த அனுபவத்தைப் பெற்றார்.

Universiti Utara Malaysia (UUM) பல்கலைக்கழகத்தில் சிறைத்துறை அறிவியலில் (Bachelor of Correctional Science) இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள SAC S. Tanabal, கல்வித் தகுதியுடன் கள அனுபவத்தையும் இணைத்து சிறைத்துறை நிர்வாகத்தில் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

தனது பணிக்காலத்தில் Seberang Perai சிறைச்சாலையின் துணை இயக்குநராகவும், Batu Gajah சீர்திருத்த மையத்தின் இயக்குநராகவும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். ஒவ்வொரு நிலையிலும் தனது நிர்வாகத் திறன், கடமையுணர்வு மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியதன் அங்கீகாரமாக, 2010 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் சிறந்த சேவை விருதை (Anugerah Perkhidmatan Cemerlang – APC) இருமுறை பெற்றுள்ளார்.

தற்போது KA13 தரத்துக்கு பதவி உயர்வு பெற்றுள்ள அவர், நாட்டின் மிகப் பழமையானதும் வரலாற்றுப் பெருமை கொண்டதுமான தைப்பிங் சிறைச்சாலையின் இயக்குநர் பொறுப்பை ஏற்றிருப்பது அவரது நீண்டகால சேவைக்குக் கிடைத்த மற்றுமொரு முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

அவரது தலைமையில் தைப்பிங் சிறைச்சாலையின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் திறன் மேலும் மேம்படுவதுடன், கைதிகளை நல்வழிப்படுத்தி சமூகத்தில் மீண்டும் பொறுப்புள்ள குடிமக்களாக இணைக்கும் மறுவாழ்வு மற்றும் சீர்திருத்தத் திட்டங்களும் புதிய உத்வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!