
மலாக்கா, மே-21-2018 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இந்திரா காந்தி வழக்கின் தீர்ப்பு,
அதற்கு முன்பு நடந்த குழந்தைகளின் ஒருதலைபட்ச மதமாற்றங்களுக்கு பொருந்தாது என்று
மலாக்கா உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில், 2009-ஆம் ஆண்டு குழந்தையாக இருக்கும்போது
இஸ்லாத்துக்கு மாற்றப்பட்ட ஒரு பெண், அந்த மாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
தாம் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாகவும்,
இந்து சூழலில் வளர்ந்ததால் இஸ்லாத்தைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாததாகவும் அப்பெண் வாதிட்டார்.
ஆனால், நீதிமன்றம் அந்த மதமாற்ற செயல்முறை, மலாக்கா இஸ்லாமிய நிர்வாகச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமானதே
என்று கண்டறிந்தது.
அதோடு, இந்திரா காந்தி வழக்கின் தீர்ப்பு எதிர்காலத்திற்கு மட்டும் பொருந்தும் என்பதால்,
2018-க்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட மதமாற்றங்கள்
தானாகவே செல்லாததாக ஆகாது என்று நீதித்துறை ஆணையர் எஸ். ராஜசேகரன் தெரிவித்தார்.
இதனால், அந்த பெண்ணின் மதமாற்றம் சட்டபூர்வமாக செல்லத்தக்கது என்றே நீதிமன்றம் அறிவித்தது.



