Latestமலேசியா

2023ல் RM10,000 மிரட்டிப் பறித்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரிய 4 போலிஸ் கார்ப்பரல்கள்

கோலாலம்பூர், ஜூன்-6 – ​3 ஆண்டுகளுக்கு முன்பு 35 வயது விற்பனையாளர் ஒருவரிடமிருந்து RM10,000 மிரட்டிப் பறித்ததாகக் கூறப்படும் வழக்கில், போலீஸ் கார்ப்பரல்கள் நால்வர் கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரியுள்ளனர்.

43 வயது Al Hafis Sairudin, 40 வயது Azmi Ghozali, 39 வயது Azlan Zakaria, 30 வயது Hanif Abdul Talib ஆகிய அந்த நால்வரும், Danny Goh என்ற அந்த விற்பனையாளருக்கு நீதிமன்றம் மூலம் RM50,000 அபராதம் விதிக்கப்படும் என அச்சமூட்டி மிரட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் காரணமாக, கடந்த 2023 டிசம்பர் 23-ஆம் தேதி செந்தூல், ஜாலான் கெப்போங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் அந்த விற்பனையாளர், அந்நால்வரிடம் RM10,000 பணத்தை ஒப்படைத்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கும் தலா RM8,000 ஜாமீன் தொகையை அனுமதித்ததுடன், வழக்கு முடியும் வரை ஒவ்வொரு மாதமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!