Latestமலேசியா

ரோம்பினில் கார் மரத்தில் மோதி விபத்து: இருவர் பலி, ஒருவர் காயம்

பஹாங், செப்டம்பர் 9 – ரோம்பினில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று இரவு, குவாந்தான்–ஜோகூர் பாரு சாலையின் 134ஆவது கிலோமீட்டரில் இந்த விபத்து நடந்தது. காரை ஓட்டி சென்ற 27 வயது இளைஞர் ரோம்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் பொழுது உயிரிழந்தார். காரின் பின்புறத்தில் அமர்ந்திருந்த 17 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் முன்புற இருக்கையில் அமர்ந்திருந்த 16 வயது இளைஞர் காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.

மூவரும் ரோம்பினிலிருந்து குவாந்தான் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது.

ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணமாக இருக்கலாமென போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!