Latestமலேசியா

2026 தேசிய விசாக தினம்: மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சி

புத்ராஜெயா, ஏப்ரல்-16-2026 தேசிய விசாக தினக் கொண்டாட்டம், சமூக ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சும் போக்குவரத்து அமைச்சும், மலேசிய புத்த மத ஆலோசக மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்கின்றன.

இது மலேசியா மடானி கொள்கையின் பரிவு மற்றும் பரஸ்பர மரியாதை பிரதிபலிப்பதாக, ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் கூறினார்.

இந்த கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக, “புத்த மதக் கோட்பாடுகள் மற்றும் மடானி நடைமுறைகள்” குறித்த தேசிய மாநாடு, மே 23-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறுகிறது.

இதில் மதத் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இவ்வேளையில் விசாக தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் பதிவுச் செய்யப்பட்ட புத்த மத அமைப்புகளுக்கு தலா RM2,000 உதவி வழங்கப்படும்.

இத்திட்டம் சுமார் 1,000 அமைப்புகளை சென்றடையும் வகையில், மொத்தம் RM2 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பங்கேற்க விரும்பும் அமைப்புகளுக்கான பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு விசாக தினம், மே 31-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!