Latestஉலகம்

40 ஆண்டுகால கடல் பயணம் முடிவு; உலகின் மிகப்பெரிய A23a பனிப்பாறை உருகி காணாமல் போனது

கோலாலம்பூர், ஜூலை 23 – உலகின் மிகப் பழமையானதும், ஒருகாலத்தில் மிகப்பெரியதுமான A23a பனிப்பாறையின் 40 ஆண்டுகால பயணம் முடிவுக்கு வந்துள்ளது. விஞ்ஞானிகளை நீண்ட காலமாக ஆச்சரியப்படுத்திய இந்தப் பனிப்பாறை தற்போது முழுமையாக உடைந்து கடலில் கரைந்துவிட்டதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

1986-ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் இருந்து பிரிந்த A23a, ஆரம்பத்தில் 4,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு, 400 மீட்டர் தடிமன் மற்றும் சுமார் 1 டிரில்லியன் மெட்ரிக் டன் எடை கொண்டிருந்தது. இது சுமார் 30 ஆண்டுகள் கடலடியில் சிக்கியிருந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு மீண்டும் நகரத் தொடங்கியது.

2025-ஆம் ஆண்டு முதல் A23a வேகமாக உருகி பல துண்டுகளாக உடைந்தது. பின்னர் வெப்பமான கடல் பகுதிக்குள் சென்றதால், அதன் உருகும் வேகம் மேலும் அதிகரித்தது.

2026 மார்ச் மாதத்திற்குள் A23a முழுமையாகச் சிதறி கடலில் கரைந்தது. இதனால், அமெரிக்க தேசிய பனிப்பாறை மையம் (USNIC) அதை கண்காணிப்பதை அதிகாரப்பூர்வமாக நிறுத்தியது.

A23a எவ்வாறு உடைந்து கரைந்தது என்பதை ஆய்வு செய்வதன் மூலம், காலநிலை மாற்றம் அண்டார்டிகா பனிப்பாறைகளை எதிர்காலத்தில் எவ்வாறு பாதிக்கும் என்பதை விஞ்ஞானிகள் அறிந்து கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!