
அலோர்காஜா, மே 5 – எட்டு இந்திய சுற்றுப் பயணிகள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்த விசாரணைக்கு உதவும் பொருட்டு சுற்றுலா வேன் ஒட்டுநர் ஒருவர் விசாரணைக்காக ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவை அலோர்காஜா செசன்ஷ் நீதிமன்றம் பிறப்பித்தது.
55 வயதுடைய அந்த சந்தேக நபர் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறி அவரது சிறுநீர் பரிசோதனையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் மே 11ஆம்தேதிவரை அவரை தடுத்துவைக்கும் உத்தரவை நீதிபதி கமாருல் அரிஸ் கமாலுடின் பிறப்பித்தார்.
1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 44(1A)(a)-இன் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களின் தாக்கத்தில் ஓட்டுநர் கவனக்குறைவாக இருந்ததால் பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறும் இதில் அடங்கும்.
போதைப்பொருள் சோதனையில் நேர்மறை முடிவு வந்த ஒரு பொதுப் போக்குவரத்து ஓட்டுநர் சம்பந்தப்பட்ட விவகாரம் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படுவது இது முதல் முறையல்ல.
ஏற்கனவே இதற்கு முன்னர் மலாக்காவில் இதேபோன்ற இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளன.



