சிப்பாங், மே 31 – தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டம் 2.0 அடிப்படையில் நாட்டிற்குள் அந்நியத் தொழிலாளர்களை தருவிக்கும் காலக்கெடு இன்று 31 மேவுடன் நிறைவடையவுள்ளது.
கடந்த மார்ச் ஒன்றாம் தேதி உள்துறை அமைச்சு விதித்த இந்த காலக்கெடுவால், முதலாளிமார்கள் தற்போது இறுதிக் கட்டத்தில் தீவிரமாக ஈடுபட, நேற்று கே.எல்.ஐ.ஏ 1 மற்றும் கே.எல்.ஐ.ஏ 2-யில் அந்நியத் தொழிலாளர்கள் குவிந்து காணப்பட்டக் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
வழக்கமாக, நாள் ஒன்றுக்கு கே.எல்.ஐ.ஏ 1 மற்றும் 2 முனையங்களில் 500 முதல் 1,000 அந்நியத் தொழிலாளர்களைக் காண முடியும். ஆனால், காலக்கெடு விதிக்கப்பட்டு விட்டதால், இம்மாதம் 27ஆம் தேதி அவ்வெண்ணிக்கை 4,000 முதல் 4,500 வரை பதிவாகியுள்ளதாகக் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜூசோ சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, இறுதி நாளான இன்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று குடிநுழைவுத் துறை எதிர்பார்க்கிறது.