Latestமலேசியா

அடுத்தாண்டு கட்டாயம் உரிமம் பெற வேண்டிய 8 சமூக ஊடகங்கள் அடையாளம் காணப்பட்டன

கோலாலம்பூர், டிசம்பர்-20, 1998-ஆம் ஆண்டு தொடர்பு – பல்லூடகச் சட்டத்தின் கீழ் அடுத்தாண்டு கட்டாயம் உரிமம் பெற வேண்டிய 8 சமூக ஊடகங்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.

Meta நிறுவனத்தின் WhatsApp, Facebook, Instagram, முன்பு டிவிட்டர் என அறியப்பட்ட இலோன் மாஸ்க்கின் X தளம், கூகுள் நிறுவனத்தின் You Tube ஆகியவை அவற்றிலடங்கும்.

ஏனையவை, Telegram, WeChat மற்றும் Tik Tok ஆகுமென, தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் (Fahmi Fadzil) கூறினார்.

குறைந்தது 8 மில்லியன் பயனர்களை வைத்திருக்கும் சமூக ஊடகங்கள், உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அதன்படியே மேற்கண்ட சமூக ஊடகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன; மற்றபடி வேண்டுமென்றே அரசாங்கம் அவற்றைக் குறி வைக்கவில்லை என ஃபாஹ்மி தெளிவுப்படுத்தினார்.

உரிமம் பெற வேண்டியன் அவசியம் குறித்த புரிதலை வழங்குவதற்காக, அமைச்சு மேற்கண்ட 8 சமூக ஊடகங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

சில நிறுவனங்கள் அப்புதிய விதிமுறைக்கு இணங்க மறுக்கின்றன; ஆனால் இந்நாட்டில் அவை ஈட்டும் இலாபத்தைப் பார்த்தால், மலேசிய சட்டத்திட்டங்களுக்கு உடன்பட மறுக்க அவற்றுக்குக் நியாயமான காரணம் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என ஃபாஹ்மி கூறினார்.

உதாரணத்திற்கு Meta-வை எடுத்துக் கொண்டால் வெறும் விளம்பரத்தின் வாயிலாக மட்டுமே மலேசியச் சந்தையில் ஆண்டுக்கு 2.5 பில்லியன் ரிங்கிட்டை அது சம்பாதிக்கிறது.

ஆனால் அதன் கீழுள்ள Facebook-கில் நடைபெறும் மோசடிகளால் மலேசியர்கள் 400 மில்லியன் நட்டத்தைச் சந்தித்துள்ளனர்.

நீங்கள் எங்கள் நாட்டில் தாராளமாக சம்பாதிப்பீர்கள், ஆனால் சட்டத்திட்டங்களை மதிக்க மாட்டீர்கள் என்றால் எப்படி நியாயமாகுமென, சமூக ஊடக சேவை வழங்குநர்களுக்கு ஃபாஹ்மி முக்கியக் கேள்வியை முன்வைத்தார்.

இணையம் அனைவருக்குப் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிச் செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு, சமூக ஊடகங்களின் ஒத்துழைப்பு அவசியமென NST-யிடம் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!