Latestமலேசியா

வாட்சப்புக்கு மாற்றாக அமையுமா? XChat-டை அறிவித்தார் இலோன் மாஸ்க்

வாஷிங்டன், ஜூன்-2 – வாட்சப்-பிற்கு போட்டியாக வருகிறது இலோன் மாஸ்கின் XChat செயலி. தனது X செயலியின் கீழ் தொடர்ந்து விரிவடைந்து வரும் டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக, XChat என்ற புதியத் தகவல் அனுப்பும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார் இலோன் மாஸ்க்.

தனியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் செய்தியிடல் தளமாகக் கூறப்படும் XChat, வாட்சப் மற்றும் பிற பிரபலமான உடனடி செய்தியிடல் தளங்களுக்கு உண்மையான போட்டியாளராக மாற்ற, X-ன் தொடர்பு கருவிகளில் AI-யை ஒருங்கிணைக்கிறது.

தனது X பக்கத்தில் இப்புதிய அம்சத்தை அறிவித்த இலோன் மாஸ்க், “புதிய XChat அனைத்தும் குறியாக்கம், மறைந்துபோகும் செய்திகள் மற்றும் எந்த வகையான கோப்பையும் அனுப்பும் திறனுடன் வெளிவருவருகிறது” என்றார்.

அதோடு, வாட்சப் போலவே ஆடியோ/வீடியோ அழைப்பும் அதில் உண்டு.

AI அம்சங்கள் மற்றும் X ஒருங்கிணைப்புடன் வரும் XChat, உரை, குரல் மற்றும் வீடியோ செய்தி அனுப்புதல், End-to-end encryption எனப்படும் முழுமையான குறியாக்கம், கிரிப்டோ பணப்பை, AI-யால் இயக்கப்படும் விவேக பதில்கள் மற்றும் சுருக்கம், சமூக ஊடகங்கள், கட்டணங்கள் மற்றும் ஊடக பகிர்வுடன் இயங்கக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது.

இலோன் மாஸ்கின் அறிவிப்பு ஆர்வத்தைத் தூண்டினாலும், XChat-டால் வாட்சப்பின் இடத்தைப் பிடிக்க முடியுமா என்பதே இங்குக் கேள்வி.

2.8 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல் செயலியாக வாட்சப் விளங்கி வருகிறது.

குறிப்பாக இந்தியா, பிரேசில் போன்ற பெரிய சந்தைகளில் வாட்சப்புக்கு பெரும் வரவேற்புண்டு.

X தளமே, குறிப்பிட்ட சில நாடுகளில் இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் போன்ற செயலிகள் அளவுக்கு பிரபலம் இல்லை; எனவே, வாட்சப்புடன் போட்டியிட வேண்டுமென்றால், அதை விட சிறப்பாக இயங்க முடியும் என்பதை XChat நிரூபிக்க வேண்டியிருக்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!