
சிங்கப்பூர், ஜூலை –10 – ஆரம்பப் பள்ளி மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக 34 வயது ஆசிரியை மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019-ஆம் ஆண்டு அம்மாணவனுக்கு 13-14 வயதிருக்கும் போது அச்சம்பவம் நடந்துள்ளது.
4 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள அந்தப் பெண், மாணவனை கார் நிறுத்துமிடத்தில் சந்தித்து, முத்தமிடல், உடலுறவு, மற்றும் வாய்வழி புணர்ச்சி கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் மாணவன் தொடர்பைக் துண்டிக்க கூறியபோதும், தொடர்ந்து தேவையற்ற 18 மின்னஞ்சல்களை அனுப்பி அவனைப் பின்தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அப்பெண் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவனின் அடையாளத்தை பாதுகாக்கும் வகையில் ஆசிரியையின் பெயர் வெளியிடப்படவில்லை.
இந்த வழக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வயது குறைந்த சிறுவனை பாலியல் உறவுக்கு உட்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.