
தைவான், ஜனவரி 26 – அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மலையேறுபவரான Alex Honnold, தைவானின் உயரிய கட்டிடமான Taipei 101-ஐ எந்தவொரு கயிறு அல்லது பாதுகாப்பு சாதனங்களுமின்றி ஏறி சாதனை படைத்துள்ளார்.
508 மீட்டர் உயரமுள்ள இந்த கட்டிடத்தை அவர் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் வெற்றிகரமாக ஏறினார். இந்த காட்சியை நூற்றுக்கணக்கானோர் நேரில் பார்த்ததுடன், Netflix-இன் நேரடி ஒளிபரப்பிலும் பார்வையிட்டனர்.
Taipei 100 கட்டிடத்தை ஏறும் போது Honnold, கட்டிடத்தின் நடுப்பகுதியில் நின்று மக்களுக்கு கை அசைத்து மேலும் உட்சாகமூட்டினார்.
Taipei 101-ஐ பாதுகாப்பு உபகரணமின்றி ஏறிய முதல் நபர் Honnold ஆவார். இதற்கு முன்பு, 2004-ஆம் ஆண்டு Alain Robert என்ற மலையேறுபவர், பாதுகாப்புக் கயிறுகளுடன் அந்தக் கட்டிடத்தை ஏறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



