
மீண்டும் ஒரு உயிர் போனது; போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட மலேசியரான லிங்கேஸ்வரன்
சிங்கப்பூர், பிப்ரவரி-12,
மலேசியரான ஆர். லிங்கேஸ்வரன், போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் அவருக்குத் தூக்கு தண்டனையை நிறைவேற்றப்பட்டதை சமூக ஆர்வலர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
இந்நடவடிக்கை, எதிர்பார்த்தது போலவே மனித உரிமை அமைப்புகள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோத கேசினோ சூதாட்ட மையமொன்றில் பாதுகாவலராக வேலை செய்து வந்த லிங்கேஸ்வரன், முன்னதாக 52 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்தியதாகக் கைதுச் செய்யப்பட்டார்.
அக்குடியரசில் பொட்டலமொன்றை பட்டுவாடா செய்தபோது அவர் சிக்கினார்.
இதையடுத்து 2018-ல் அவர் கட்டாய மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இவ்வாண்டில் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட நான்காவது நபராக லிங்கேஷ்வரன் திகழ்கிறார்.
Amnesty International உட்பட பல மனித உரிமை அமைப்புகள், போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது அனைத்துலக மனித உரிமை சட்டங்களுக்கு முரணானது எனக் கூறி சிங்கப்பூரை கடுமையாகக் கண்டித்துள்ளன.
இதற்கு முன் கடந்த செப்டம்பரில் கே. தட்சிணாமூர்த்தி என்ற 39 வயது மலேசியர் இதே போதைப்பொருள் கடத்தல் குற்றத்திகாக சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்.



