
இனவெறி உள்ளடக்கத்தைக் கொண்ட 50க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகளை எம்.சி.எம் .சி அடையாளக் கண்டது
கோலாலம்பூர், பிப்ரவரி 13 –
சிலாங்கூர், காஜாங்கில் உள்ள கம்போங் சுங்கை ஜெர்னியில் நான்கு சக்கர வாகனம் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதைக் காட்டும் வைரல் காணொளியுடன் தொடர்புடைய இனவெறி உள்ளடக்கத்தைப் பரப்புவதில் ஈடுபட்டதாக நம்பப்படும் 50க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகளை MCMC எனப்படும் மலேசிய தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) அடையாளம் கண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்த நம்பகத்தன்மையற்ற நடத்தை (CIB) கூறுகள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் தொடர்பு அமைச்சர் பாமி பாட்சில் ( Fahmi Fadzil ) தெரிவித்தார். இது பொதுமக்களின் பார்வையை பாதிக்கும் நோக்கத்துடன் ஒருங்கிணைந்த தகவல்களைப் பரப்புவதாகும் என அவர் விவரித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில், சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவல்கள் வேண்டுமென்றே இனவெறிக் கதையுடன் பதிவேற்றப்பட்டன, இந்த சம்பவத்தில் குண்டர் கும்பலைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் மலாய் நில உரிமையாளரை காயப்படுத்தியதாகக் தகவல்கள் வெளியானதாக , இன்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
இதனிடையே காஜாங் கம்போங் சுங்கை ஜெர்னியில் ஒரு நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை நான்கு சக்கர வாகனம் மோதியதைக் காட்டும் வைரலான வீடியோ சம்பவத்தில் குண்டர்கள் அல்லது இனப் பிரச்னை எதுவும் இல்லையென சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் ( Shazeli Kahar ) தெளிவுபடுத்தினார்.



