Latestமலேசியா

ஈப்போவில் SUV–கார் மோதல்: ஆடவர் பலி; ஐவர் உயிர் தப்பினர்

ஈப்போவில் SUV–கார் மோதல்: ஆடவர் பலி; ஐவர் உயிர் தப்பினர்

ஈப்போ, பிப்ரவரி-16,

இன்று அதிகாலை ஈப்போ, ஜெலாப்பாங், தாமான் மேரு Caltex நிலையம் அருகே, Mazda CX5 SUV வாகனமும் Honda City காரும் மோதிய விபத்தில், 32 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவர், SUV-யில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த 32 வயது பயணியாவார்.

அதே SUV வாகனத்திலிருந்த மேலுமிரு ஆடவர்களும், Honda City காரிலிருந்த 22 வயது இளைஞர்கள் மூவரும், தீயணைப்பு வண்டி வருவதற்குள் சொந்தமாகவே வாகனத்திலிருந்து வெளியேறி உயிர் தப்பினர்.

மேரு ராயா தீயணைப்பு நிலைய வண்டி சம்பவ இடம் விரைந்து, காலை 5.13 மணிக்கு மீட்பு நடவடிக்கையை முடித்தது.

இதற்கிடையில், பீடோரில் நிகழ்ந்த மற்றொரு விபத்தில் Proton Saga கார், கடை படிக்கட்டில் மோதி, முன்னிருக்கைப் பயணியான 56 வயது ஆடவர் தலையில் காயம் அடைந்தார்.

காருக்குள் சிக்கியிருந்த அவரை, தீயணைப்பு வீரர்கள் மீட்டு, அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!