
கோலாலம்பூர், மார்ச்-17-பிப்ரவரி 3-ஆம் தேதி ஃபேஸ்புக்கில் இட்ட பதிவுத் தொடர்பான குற்றச்சாட்டை, GARAH எனப்படும் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பேரணியின் ஒருங்கிணைப்பாளர் சம்ரி வினோத் மறுத்துள்ளார்.
முன்னதாக கைவிலங்கிடப்பட்ட நிலையில் சம்ரி கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார்.
பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
4,500 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் சம்ரியை ஜாமீனில் விடுவித்த நீதிபதி, ஏப்ரல் 29-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென்றார்.



