
பெங்களூரு, மார்ச்-29-தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணத்திற்கு முந்தைய புகைப்படப்பிடிப்பு வன்முறையாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை அழகுக்கு பெயர்பெற்ற பெட்டடா பைரவேஸ்வரர் கோவிலில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
விரைவில் திருமணமாகவுள்ள ஒரு ஜோடி, திருமண புகைப்படப்பிடிப்புக்காக அண்மையில் அங்கு வந்திருந்தனர்.
அப்போது, புகைப்படக்காரர்கள் கோவில் வளாகத்தில் செருப்பு அணிந்து இருந்ததாக உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் தொடங்கிய வாய்த்தகராறு, அடிதடியாக மாறியது.
இத்தாக்குதலில் 2 புகைப்படக்காரர்கள் காயமடைந்ததுடன், ஒரு கேமராவும் சேதமடைந்தது.
போலீஸார் சம்பவ இடம் விரைந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் விசாரணைக்காகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.



