
கோலாலம்பூர், மார்ச் 31 – எஸ்.பி .எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ S.A விக்னேஸ்வரன் தனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
அதே வேளையில் சிறைந்த அடைவு நிலை பெறாதவர்கள் மனம் தளராமல் இதர வாய்ப்புக்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொருவருக்கும் முன்னேறும் வாய்ப்பு இருப்பதால் இதற்கான சரியான பாதையை காட்ட ம.இ.கா எப்போதும் தயாராக இருப்பதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார் .
ஒரு மாணவனின் வாழ்க்கையில் உயர்கல்வி என்பது மிக முக்கியமான அடித்தளமாகும். அதை சரியான முறையில் திட்டமிட்டு, முழு முயற்சியுடன் மேற்கொள்வது அவசியம்.
அனைத்து மாணவர்களும் தொடர்ந்து முயன்று, வெற்றியின் பாதையில் முன்னேறுவதற்கும் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு தனது மனமார்ந்து வாழ்த்துக்களையும் விக்னேஸ்வரன் தெரிவித்துக் கொண்டார்.



