Latestமலேசியா

Hormuz நீரிணையில் அமெரிக்கா அதிரடி முற்றுகை; சினத்தில் சீறும் ஈரான்

தெஹ்ரான், ஏப்ரல்-14-Hormuz நீரிணையில் அமெரிக்கா முற்றுகையிட்டு, கப்பல்களை மறிக்கத் தொடங்கியுள்ளது ஈரானை மேலும் சினமூட்டியுள்ளது.

அமெரிக்கக் கடற்படை மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கையால், வளைகுடா வட்டாரத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.

பாகிஸ்தானில் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிந்த நிலையில், ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்கா இடைமறித்து வருகிறது.

ஏற்கனவே நீரிணையை ஒரு பகுதி மூடியிருந்த ஈரானுக்குப் பதிலடியாகவே அமெரிக்கா இந்த முற்றுகையைத் தொடங்கியுள்ளது.

ஈரான் விதித்துள்ள ‘சட்டவிரோத’ கட்டணத்தைச் செலுத்தும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்த இருதரப்பு மோதலால் அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பீப்பாய்க்கு 100 டாலர்களைத் தாண்டக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த முற்றுகை ஒரு ‘போர் நடவடிக்கை’ (Act of War) என ஈரான் வருணித்துள்ள நிலையில், ஐநா சபை அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.

நிலைமை கைமீறிப் போனால் இது ஒரு முழு அளவிலான உலகப் போராக மாறக்கூடும் எனப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!