Latestமலேசியா

சர்ச்சைக்குரிய நாடகக் காட்சி: மலாயா பல்கலைக்கழகம் பகிரங்க மன்னிப்புக் கோரியது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-16-ஒரு நாடகப் போட்டியில் இடம்பெற்ற ‘அநாகரீகமான’ காட்சி பொது மக்களிடையே பெரும் கண்டனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, மலாயா பல்கலைக்கழகமான UM பகிரங்க மன்னிப்புக் கேட்டுள்ளது.

​சமூக வலைத்தளங்களில் பரவிய அந்த வீடியோவில், ஒரு ஜோடி படுக்கையில் மிகவும் நெருக்கத்தில் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

இது பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கும், கலாச்சார பண்புகளுக்கும் முரணானது என இணையவாசிகள் விமர்சித்தனர்.

​இதுகுறித்து விளக்கம் அளித்த UM நிர்வாகம், “முன்கூட்டியே சரிபார்க்கப்பட்ட அசல் காட்சியமைப்பில் இந்த குறிப்பிட்ட காட்சி இடம்பெறவில்லை” என தெளிவுப்படுத்தியது.

எனவே விதிமுறைகளை மீறியதற்காக அந்த நாடகக் குழு போட்டியிலிருந்து உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

​இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதிருக்க, மாணவர் கலை நிகழ்ச்சிகளைக் கண்காணிக்கும் நடைமுறைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் UM உறுதியளித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!