
பெந்தோங், ஏப்ரல்-30-கெந்திங் மலையில் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று காலை, கெந்திங் மலைப்பாதையின் கீழ்நோக்கிச் செல்லும் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
Mikail Brian Iskandar எனும் அந்த இளைஞர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதியதில், அவர் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டார்.
பெந்தோங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் விரைந்து வந்து அவரை மீட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரும் பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர்.
உயிரிழந்த இளைஞரின் உடல் மேல் நடவடிக்கைக்காக போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது



