
செப்பாங், மே-2,
KLIA Terminal 1 முனையத்தில், பயணிகளிடம் பணம் கேட்டு பிச்சையெடுத்த இரண்டு வெளிநாட்டவர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
விமான நிலையத்தின் புறப்பாட்டுப் பகுதியில் (Departure Hall) சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த இருவர், அங்கு வரும் பயணிகளை அணுகிப் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட போலீஸார், அவர்களைக் கைதுச் செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
முறையே 28, 45 வயதிலான இருவரும் தஜிக்கிஸ்தான் மற்றும் பாலஸ்தீன ஆடவர்கள் ஆவர்.
இவர்களிடம் முறையான பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என, KLIA போலீஸ் கூறியது.
பிச்சையெடுப்பது தொடர்பில் அண்மையில் வைரலான வீடியோவில் காணப்பட்டவர்களே இவ்விரு ஆடவர்கள் என நம்பப்படுகிறது.



