
வாஷிங்டன், மே-5-Hormuz நீரிணையில் சிக்கியுள்ள வர்த்தகக் கப்பல்களை மீட்பதற்காக, அங்கிருந்த ஈரானின் 7 ‘வேகப் படகுகள்’ (Fast Boats) மீது அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதை, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, ஐக்கிய அரபு சிற்றரசின் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு முனையமான Fujairah-வில் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
இதில் ஒரு தென்கொரிய கப்பல் மற்றும் யுஏஇ எண்ணெய் கப்பல் சேதமடைந்தன.
இந்நிலையில், பிப்ரவரி முதல் இந்தப் பகுதியில் நிலவும் மோதலால் ஏற்கனவே சுமார் 2,000 கப்பல்கள் மற்றும் 20,000 மாலுமிகள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்.
அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சியே இந்த ‘Project Freedom’ திட்டமாகும்.
இதன் கீழ், Maersk நிறுவனத்தின் ஒரு கப்பல் அமெரிக்கப் பாதுகாப்போடு வெற்றிகரமாக வெளியேறியுள்ளது.
என்றாலும், ஈரான் இந்தத் திட்டத்தை Project Deadlock என கேலி செய்துள்ளது.
அதோடு, அமெரிக்காவின் போர்க்கப்பல் மீது தாங்கள் எச்சரிக்கைச் சூடு நடத்தியதாகவும் ஈரான் கூறியுள்ளது.
இந்தப் பதற்றத்தால் அனைத்துலகச் சந்தையில் Brend கச்சா எண்ணெய் விலை 5% அதிகரித்து, பீப்பாய்க்கு 115 டாலரைத் தாண்டியுள்ளது.



