
கோலாலாம்பூர், மே-8-தமிழக வெற்றிக் கழகம், TVK-வின் எழுச்சி தற்போது இந்திய அரசியலில் புதிய மாற்ற அலைகளை உருவாக்கி வருகிறது.
நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் தலைமையிலான இந்தக் கட்சி, குறுகிய காலத்திலேயே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது ஒரு நடிகரின் பிரபலத்தையே மட்டுமல்லாமல், மாற்றத்தை விரும்பும் மக்களின் மனநிலையையும் பிரதிபலிப்பதாக, Dinamik Sinar Kasih எனப்படும் DSK குழுமத்தின் தலைவர் டத்தோ என். சிவக்குமார் வருணித்துள்ளார்.
இன்றைய இளைஞர்கள் பழைய அரசியல் பேச்சுகளையும் வெற்று வாக்குறுதிகளையும் விட, நேர்மையான மற்றும் செயல்படும் தலைமைத்துவத்தையே விரும்புகின்றனர் என்றார் அவர்.
சமூக ஊடக வளர்ச்சியால் மக்கள் தலைவர்களை நேரடியாக மதிப்பிடும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.
TVK-வின் எழுச்சி உலக அரசியலுக்கே ஒரு முக்கிய செய்தியாக அமைந்துள்ளது; மக்கள் விரும்பும் மாற்றத்தை வழங்காத அரசியல் சக்திகள் எதிர்காலத்தில் நிராகரிக்கப்படலாம் என்றும் டத்தோ சிவக்குமார் எச்சரித்தார்.
அரசியல் கட்சியைத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு, அதுவும் அரை நூற்றாண்டு கால திமுக – அதிமுக ஆகிய திராவிட கட்சிகளின் ஆதிகத்தை விஜய் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
பெரும்பான்மையைக் கிடைக்கா விட்டாலும், இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தின் புதிய முதல்வராக அவர் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



