பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 7 பேர் பலி, 23 பேர் காயம்

இஸ்லாமாபாத், மே-9-பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில், பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுப் படுகையில் தலைகுப்புற விழுந்ததாக அதிகாரிகள் கூறினர்.
இவ்விபத்தில் 23 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து நிகழ்ந்த பகுதியில் அம்புலன்ஸ் வசதிகள் குறைவாக இருந்ததால் மீட்புப் பணிகளில் சற்று சுணக்கம் ஏற்பட்டதாக மாவட்ட சுகாதார அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து அதிவேகமாகச் சென்றதே இந்த கோர விபத்துக்கு காரணமாகக் கருதப்படுகிறது.
இது குறித்து உள்ளூர் போலீஸார் தற்போது விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.



