வரலாற்றுச் சாதனை: பாஸ் கட்சியின் அதிகாரப்பூர்வப் பிரிவு என்ற வகைஉயில் DHPP நடத்திய முதல் தேர்தல்

பத்து கேவ்ஸ், மே-10,
பாஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஐந்தாவது பிரிவான DHPP எனப்படும் பாஸ் ஆதரவாளர் பேரவை, அதன் முதல் பொதுப் பேரவையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
KUIZM பல்கலைக் கழகக் கல்லூரியில் நடைபெற்ற இந்த மாநாட்டில், புதிய தலைமையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் ஜனநாயக முறையில் நடைபெற்றது.
இதில் 2026-2027 தவணைக்கான புதியத் தலைவராக குமரேசன் பேபி காளிதாசனு, துணைத் தலைவராக லிம் குவான் செங்கும் பேராளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதிலுமிருந்து வந்த பேராளர்களின் பங்கேற்பு, இந்த இயக்கத்தின் மீதான வளர்ந்து வரும் நம்பிக்கையை வெளிப்படுத்தியது.
மாநாட்டில் பேசிய தேசிய தகவல் பிரிவுத் தலைவர் Dr பாலச்சந்திரன் கோபால் கிருஷ்ணன், பாஸ் இனவாதத்தைக் கடந்து, நீதியையும் தேசிய ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது என்பதை இது நிரூபிப்பதாகக் கூறினார்.
1986-ல் CCC எனப்படும் சீனர் ஆலோசக மன்றமாக தொடங்கிய இந்தப் பயணம், பின்னர் பாஸ் ஆதரவாளர்கள் கிளப்பாகவும், தற்போது DHPP-யாகவும் பல இன மக்கள் ஒன்றிணையும் மேடையாக மாறியுள்ளதாக அவர் சொன்னார்.
மலேசிய அரசியலில் பல இன மக்களின் முதிர்ந்த அரசியலுக்கு இந்த மாநாடு ஒரு புதிய தொடக்கமாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும் பாலசந்திரன் கூறினார்.



