
கோலாலம்பூர், மே-11-தனது பழைய கார்களின் எண்கள் மூலம் டோட்டோ ஜேக்போட் ( Jackpot ) பரிசுத் தொகையான 14.8 மில்லியன் ரிங்கிட்டை சிலாங்கூரைச் சேர்ந்த 52 வயதுடைய ஆடவர் ஒருவர் வென்றார்.
மே 6-ஆம் தேதி டோட்டோ ஜேக்போட் குலுக்களில் 9186 மற்றும் 4828 என்ற எண்களை எழுதியதன் மூலம் சொத்துடமை நிர்வாகியான அந்த ஆடவர் கோடிஸ்வரராகியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த எண்களை எழுதிவருவதாகவும் தாம் பயன்படுத்திய அந்த இரண்டு பழைய கார்களின் எண்களும் உணவுர்ப்பூர்வமாக இருந்தோடு ஒரே குலுக்களில் அந்த இரண்டு எண்களும் வரும் என நினைத்து பார்க்கவில்லயென அவர் தெரிவித்தார்.
மொத்தம் 6 ரிங்கிட்டிற்கு அந்த எண்களை வாங்கிய அவர் இதன் மூலம்
ஒரு கோடியே 48 லட்சத்து 18,901 ரிங்கிட்,35 சென் பரிசுத் தொகையாகவும் 336 ரிங்கிட்டை போனஸ் தொகையாகவும் ஸ்போர்ட் டோட்டோ மலேசியா லோட்டரி தலைமையகத்தில் பெற்றுக் கொண்டார்.
இந்த பரிசுத் தொகையின் மூலம் ஆடம்பர கார் ஒன்றை வாங்க விருப்பதோடு மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்யவிருப்பதாகவும் அதே வேளையில் நீண்ட கால நிதி பாதுகாப்பை கருதி நிதியை சிக்கனத்தோடு நிர்வகிக்கும் கடப்பாட்டை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனியே கோலாலம்பூரைச் சேர்ந்த மற்றொரு நபர் ஜெக்போட்டில் எஞ்சிய பரிசுத் தொகையான 19 லட்சத்து 75,853 ரிங்கிட் 50 சென்னை வென்றார்.



