
சென்னை , மே 12 -தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற தமக்கு மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டதற்கு விஜய் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பிரதமரின் அன்பான வாழ்த்துகளால் மிகுந்த பெருமை அடைவதாகவும் அவரது கனிவான செயலுக்கு நன்றி என்றும் விஜய் தமது X தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதே வேளையில் தமிழ்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையே சிறந்த ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் நட்புறவை வலுப்படுத்துவதற்கும் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.



