மண்தோண்டும் இயந்திரத்தில் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

ஷா அலாம், மே 21 – ஷா அலாமில் நள்ளிரவில் எக்ஸவேட்டர் (excavator )
எனப்படும் மண்தோண்டும் கணரக இயந்திரத்தின் மீது மோட்டார் சைக்கிள்
மோதியதைத் தொடர்ந்து அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
சீனி சுத்தகரிப்பு ஆலை சந்திப்பை நோக்கிச் செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் இதனைத் தெரிவித்தார்.
20 வயதுடைய இளைஞர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் அந்த கனரக இயந்திரத்தில் மோதிய பின்னர் அதன் அடியில் சிக்கிக் கொண்டார்.
அந்த ஆடவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்ததாக சுகாதார அமைச்சின் மருத்துவ பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.
ஷா அலாம் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிக்கொண்டவரை மீட்டு மேல் நடவடிக்கைக்காக அவரது உடலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



