Latestமலேசியா

RM186,580 Volkswagen கார் பரிசுடன் களம் இறங்கும் ‘வணக்கம் மலேசியாவின் 2ஆம் ஆண்டு நல்லெண்ண கோல்ஃப் போட்டி

கோலாலம்பூர், மே-23 – உள்ளூர் தமிழ் ஊடக வரலாற்றில் முதன் முறையாக 1 லட்சத்து 86 ஆயிரத்து 580 ரிங்கிட் மதிப்புள்ள ‘Volkswagen Golf R-Line’ சொகுசுக் காரை ‘Hole In One’ மெகா பரிசாகக் கொண்டு, வணக்கம் மலேசியாவின் நல்லெண்ண கோல்ஃப் போட்டி 2026, வரும் ஜூன் 5-ஆம் தேதி ஷா ஆலாமில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

கோல்ஃப் விளையாட்டு உலகிற்கு ஒரு புதிய தெம்பாகவும், சமூகப் பணிகளுக்குப் பேராதரவாகவும் விளங்கும் வண்ணம், நாட்டின் முன்னணி தமிழ் மின்னியல் ஊடகமான ‘வணக்கம் மலேசியா’ தனது முத்திரையைப் பதிக்கிறது.

இத்தகையதொரு பிரம்மாண்டமான கோல்ஃப் தொடரை மிக உயர்ந்த பரிசுகளுடன் வெற்றிகரமாக ஏற்பாடு செய்துள்ள ஒரே ஊடக நிறுவனம் என்ற பெருமையோடு, ‘வணக்கம் மலேசியா நல்லெண்ண கோல்ஃப் போட்டி 2026’-க்கான அதிகாரப்பூர்வப் பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கம்பீரமாக அடியெடுத்து வைக்கும் இப்போட்டியானது, ஜூன் மாதம் 5-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, பிற்பகல் 1.30 மணிக்கு சிலாங்கூர், ஷா ஆலாமில் அமைந்துள்ள Bukit Kemuning Golf & Country Resort-டில் அரங்கேறவுள்ளது.

இதற்கான நுழைவுக் கட்டணம் 385 ரிங்கிட் மட்டுமே; இதில் விளையாடுவதற்கான கட்டணம், பிரத்யேக நினைவுப் பரிசுகள், அறுசுவை மதிய மற்றும் இரவு உணவுகள் ஆகியவை முழுமையாக அடங்கும்.

அதுமட்டுமின்றி, அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் பல்வேறு பரிசுகளைத் தட்டிச் செல்லும் பொன்னான வாய்ப்பும் காத்திருக்கிறது.

பரிசு இணை ஆதரவாளர்களாக PHS Autohaus மற்றும் Magnum corporation நிறுவனம் ஆகியவை விளங்குகின்றன.

விளையாட்டையும் தாண்டி, பிறர் நலம் பேணும் உயரிய உன்னத நோக்கில் நடத்தப்படும் இந்தத் தொடரின் மூலம் ஈட்டப்படும் தொகைகள், நமது சமூகத்தின் கண்களான தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் நன்கொடையாக வழங்கப்படவிருக்கின்றன.

களத்தில் திறமையைக் காட்டி, அறத்தில் பங்கெடுக்க விரும்பும் கோல்ஃப் பிரியர்கள் அனைவரும், உடனடியாகத் திரையில் தோன்றும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரில் தங்களின் பெயர்களை இன்றே பதிவு செய்து கொள்ளுமாறு வணக்கம் மலேசியா கேட்டுக் கொள்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!