மலேசியா

மலேசியப் படைப்பாளிகளுக்கு RM10,000 ரொக்கப் பரிசு; Vanakkam Maxx OTT வழங்கும் பிரம்மாண்ட குறும்பட போட்டி 2026

கோலாலாம்பூர், மே-27,

மலேசியப் படைப்பாளிகளின் அசாத்தியத் திறமைகளை உலக அரங்கிற்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில், வணக்கம் மலேசியாவின் Vanakkam Maxx OTT தளம் பிரம்மாண்டமான ‘குறும்பட போட்டி 2026’-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உள்ளூர் இளம் இயக்குநர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான ஒரு பொன்னான வாய்ப்பாக இப்போட்டி மலரவிருக்கிறது.

கவரும் வகையில் கதை சொல்லும் திறமையும், கற்பனை வளமும் கொண்ட மலேசியப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், இப்போட்டியின் சிறந்த கதைகளுக்கு மாபெரும் ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.

முதல் பரிசாக 10,000 ரிங்கிட், இரண்டாம் பரிசாக 6,000 ரிங்கிட், மூன்றாம் பரிசாக 4,000 ரிங்கிட் மற்றும் ஆறுதல் பரிசாக 500 ரிங்கிட்டும் வழங்கப்படவுள்ளன.

வெறும் போட்டி என்பதையும் தாண்டி, அடுத்த தலைமுறைக்கான ஆகச்சிறந்த சினிமா தேடலாகவும், திறமைகளை இணைக்கும் பாலமாகவும் Vanakkam Maxx OTT இந்தத் தளத்தை அமைத்துள்ளது.

போட்டியில் பங்கேற்கப் பதிவுs செய்வதற்கான இறுதி நாள் வரும் ஜூன் 25-ஆம் தேதியாகும்.

உங்கள் கற்பனை உலகத் திரையில் வெற்றிக் கதையாக மாற, திரையில் தோன்றும் QR குறியீட்டை இப்போதே ஸ்கேன் செய்து விரைவாகப் பதிவச் செய்யுங்கள்.

மலேசியக் கலைஞர்களின் தனித்துவமான திரையாற்றலை இனி உலகம் காணட்டும்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!