உலகக் கிண்ணத்திற்கு முன்பாக மெக்சிகோ பயணம் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை

அமேரிக்கா, ஜூன் 11 – உலகக் கிண்ண காற்பந்து போட்டி தொடங்கவுள்ள நிலையில், மெக்சிகோவுக்கு பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தீவிரவாதம், குற்றச் செயல்கள், கடத்தல் மற்றும் பணயக்கைதி சம்பவங்கள் போன்ற அபாயங்கள் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
உலகக் கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ள மெக்சிகோ நகரங்களில் ஒன்றான சபோபான் (Zapopan) பகுதிக்கு பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்ற என்ற எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மெக்சிகோ நகரத்திற்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு கூடுதல் எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் நகரங்களுக்கு இடையே பயணம் செய்வதைத் தவிர்க்கவும், தெருவில் டாக்ஸி அழைப்பதை தவிர்க்கவும், தனியாக பயணம் செய்ய வேண்டாமெனவும் அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



