Latestமலேசியா

குடிக்கும் பானத்திற்கு கழிவறை குழாய் நீரா? வைரல் வீடியோவால் சர்ச்சை

கோலாலம்பூர், ஜூன்-12–கழிவறை அருகிலுள்ள குழாயிலிருந்து நீரை எடுத்து விற்பனைக்கான பானங்கள் தயாரிக்கப்படுவதாகக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, உணவு பாதுகாப்பு குறித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகத்தில் வெளியான அந்த பதிவில், விற்பனையாளர் ஒருவர் பெரிய கொள்கலன்களில் குழாய் நீரை நிரப்புவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இதைப் பார்த்த பலர், அந்த நீர் சுத்தமானதா என்றும், 5 ரிங்கிட்டுக்கு விற்கப்படும் பானங்களின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சில இணையவாசிகள், இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக தெரு பானங்களை வாங்குவதை தவிர்ப்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், சில பான விற்பனையாளர்கள் தாங்கள் வடிகட்டிய அல்லது கொதிக்கவைத்த நீரை மட்டுமே பயன்படுத்துவதாக கூறியதுடன், ஒரு சம்பவத்தை வைத்து அனைத்து விற்பனையாளர்களையும் குற்றம் சாட்டக்கூடாது என வலியுறுத்தினர்.

வைரலான இந்த வீடியோ தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!