
அர்ஜென்டினா, ஜூன்-16– 2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளை கண்டு களிக்க 13,000 அர்ஜென்டினா ரசிகர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று அர்ஜென்டினா அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தப் பட்டியலில், தங்கள் குழந்தைகளுக்கான பராமரிப்புத் தொகையை செலுத்தத் தவறிய பெற்றோர்கள் மற்றும் சில குற்றப் பதிவுகள் கொண்ட நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தங்கள் குழந்தைகளை கவனிக்காதவர்கள், காற்பந்து போட்டிகளைப் பார்க்கச் செல்லக் கூடாது, அர்ஜென்டினா அரசு தெரிவித்துள்ளது.
நடப்பு உலகக் கிண்ண சாம்பியனான அர்ஜென்டினா, 2026 உலகக் கிண்ணத்தில் தனது முதல் போட்டியில் அல்ஜீரியாவை (Algeria) எதிர்கொள்ளவுள்ளது.



