Latestமலேசியா

கெடா கூரூன் இராணுவ முகாமில் கையெறி குண்டு வெடிப்பு: 2 இராணுவ வீரர்கள் பலி

கெடா, ஜூன் 16 – கெடா கூரூனிலுள்ள (Gurun) ஹோபார்ட் இராணுவ முகாமின் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் இன்று நடைபெற்ற கையெறி குண்டு வீச்சு பயிற்சியின் போது ஏற்பட்ட வெடிப்பில் 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

காயமடைந்த இருவரும் சுங்கை பட்டானியிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே உயிரிழந்ததாக மலேசிய தரைப்படை (Tentera Darat Malaysia) தெரிவித்துள்ளது.

சம்பவத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் பயிற்சிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!