
உள்நாட்டுச் சட்டத்துறையில் தங்களின் முத்திரையைப் பதிக்கும் நோக்கில், T. Santhy & Co. Advocates & Solicitors வழக்கறிஞர் நிறுவனத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா நேற்று புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதன் நிறுவனர், ஒரு தோட்டத் தொழிலாளியின் மகளான T. ஷாந்தி ஆவார்.
5 உடன்பிறப்புகளுடன் பிறந்து, கஷ்டமான வாழ்க்கைச் சூழலில் படித்து இன்று இந்த உயரத்தை எட்டியுள்ளார்.
இந்த அலுவலகத்தை கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் சேவை மையத்தின் மேலாளர் Muhamad Faizal Ismail திறந்து வைத்துச் சிறப்பித்தார்.
விழாவுக்குப் பிறகு வணக்கம் மலேசியாவிடம் பேசிய சிறப்பு விருந்தினர் Faizal Ismail, தற்போதைய காலகட்டத்தில் சாமானிய மக்களுக்கும் சட்டப் பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகள் எளிதாகச் சென்றடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறினார்.
இவ்வேளையில், தங்களின் புதிய அலுவலகம், வாடிக்கையாளர்களுக்கு நேர்மையான மற்றும் உயர்தரமான சட்டச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கும் என சாந்தி உறுதியளித்தார்.
இன்று வழக்கறிஞார இருந்தாலும் Shanty-யில் தொழில் வாழ்க்கைத் தொடங்கியது என்னவோ ஓர் ஆசிரியராகத் தான்.
தான் வழக்கறிஞர் ஆக வேண்டுமென்பது தந்தையின் கனவு என அவர் சொன்னார்.
15 ஆண்டு காலம் வழக்கறிஞர் வாழ்க்கைப் பற்றியும் அவர் விவரித்தார்.
இந்தக் கனவு நனவானதற்குக் காரணமான அனைவருக்கும் அவர் நன்றித் தெரிவித்தார்.
புதிய தடத்தில் தனது வெற்றிகரமான சட்டப் பயணத்தைத் தொடங்கியுள்ள டி. சாந்திக்கு, சட்டத்துறையின் முக்கியப் பிரமுகர்கள், வணிகக் கூட்டாளிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.



