Latestமலேசியா

24 ஆண்டு காத்திருப்புக்கு முடிவு: பினாங்கின் ஸ்ரீ கிருஷ்ண குஞ்ச் பிஹாரி மந்திரில் கோலாகல கும்பாபிஷேகம்

ஜோர்ஜ்டவுன், ஜூன்-23-பினாங்கின் மிகப்பழமையான வைஷ்ணவ ஆலயமும், மாநிலத்தின் ஒரே வட இந்திய இந்து ஆலயமுமான ஸ்ரீ கிருஷ்ண குஞ்ச் பிஹாரி மந்திர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம், சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

1835-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்தின் மறுசீரமைப்பு மற்றும் கும்பாபிஷேகப் பணிகளுக்காக, பினாங்கு இந்து அறப்பண வாரியம் சுமார் 600,000 ரிங்கிட்டை முதலீடு செய்துள்ளது.

பினாங்கு இந்து சமூகத்தின் ஆழமான நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் இந்த ஆலயத்தின் வரலாற்றுத் தருணத்தில், மக்கள் பிரதிநிதிகளான ராம் கர்பால் சிங், லிம் ஹுய் யிங், RSN ராயர் மற்றும் செனட்டர் Dr லிங்கேஸ்வரன் ஆர் அருணாசலம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பன்முகத்தன்மை, மத நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதைக்கு பினாங்கு மாநில அரசு எப்போதும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் நிருபித்துள்ளது.

எதிர்கால சந்ததியினருக்காக நமது வழிபாட்டுத் தலங்களும் கலாச்சார அடையாளங்களும் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என மாநில அரசு உறுதியளித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!