
கோலாலம்பூர், ஜூன் 26 – மியான்மார் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் சடலம், கோலாலம்பூர் தாமான் ஶ்ரீ ராம்பாயிலுள்ள டி’ரெஜாங் (D’Rejang, Taman Sri Rampai) உணவு வளாகத்தில் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையர் அலுவலகம் (UNHCR) வழங்கிய அடையாள அட்டையை வைத்திருந்த அவர், வீடற்றவராக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
நேற்று காலை, பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, அவர் உணவக வளாகத்தில் உள்ள சிமெண்ட் இருக்கையில் படுத்த நிலையில் சுயநினைவின்றி கிடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டதுடன், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வாங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கமிஷனர் அன்னாஸ் சுலைமான் (Asisten Komisioner Annas Sulaiman) தெரிவித்தார்.



